6,000 ரூபாயை வாங்கிக்கொண்டு ஆர்.கே.நகர் போல கதையை முடித்து விடுங்கள்: டிடிவி தினகரன்

6,000 ரூபாயை வாங்கிக்கொண்டு ஆர்.கே.நகர் போல கதையை முடித்து விடுங்கள்: டிடிவி தினகரன்
Updated on
1 min read

எடப்பாடி பழனிசாமி பல்லியோ, பாம்போ அல்ல பச்சோந்தி என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விழுப்புரத்தில் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''எடப்பாடி பழனிசாமி பொய்களைக் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். அவர் நமக்கு துரோகம் செய்து விட்டார் என்று ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், நான் யார் காலிலும் விழவில்லையே? ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா, பாம்பா? என்று. இல்லை அவர் பச்சோந்தி. சரியா, இல்லையா?

நாம் அதிமுகவைக் கேட்பதையெல்லாம் திமுகவினர் கேட்கிறார்கள். நாம் திமுகவை விமர்சித்துப் பேசுவதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அந்த இரண்டு கட்சிகளுக்கும் பேச வேறு விஷயம் இல்லை. இரண்டு கட்சிகளையும் விமர்சித்துப் பேசும் ஒரே தகுதி அமமுகவுக்குத்தான் உண்டு.

நாளாக நாளாக அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஆர்.கே.நகர் போல ரூ.6 ஆயிரம் ரூபாய் கூடக் கொடுப்பார்கள். எல்லா மக்களிடமும் சொல்லிவிடுங்கள், அது உங்கள் பணம்தான். 6,000 ரூபாயை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள் ஆர்.கே.நகர் போல'' என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in