எலெக்‌ஷன் கார்னர்: புரட்சி எழுத்தாளரும்... புதுக்கோட்டை வேட்பாளரும்!

எலெக்‌ஷன் கார்னர்: புரட்சி எழுத்தாளரும்... புதுக்கோட்டை வேட்பாளரும்!
Updated on
1 min read

எழுத்தாளரான துரை குணா புதுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார். எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ள இவர், ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற குறு நாவலும், ‘கீழத்தெரான்’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தனி ஒருவனாய் பல கட்ட போராட்டங்களை நடத்தி, 3 முறை சிறை சென்றவர் குணா. ‘ஆட்சியர் வேலைக்கு ஆள் தேவை’ என்று அதிரடி விளம்பரம் செய்த இவர், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றாததைக் கண்டிக்கும் விதமாக ‘அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்’ என்றும் அறிவித்த புரட்சிக்காரர்.

இவரிடம் சிக்கிக் கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்ன பாடுபடப் போகிறார்களோ!

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in