

தான் வெற்றி பெற்றால் அரவக்குறிச்சியின் மீது டெல்லியின் பார்வைப்படும் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களம் காணும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ”உங்களது ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். உங்களது ஒவ்வொரு ஓட்டும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.எனவே யோசித்து வாக்களியுங்கள்.
நான் வெற்றி பெற்றால் அரவக்குறிச்சியின் மீது டெல்லியின் பார்வைப்படும். தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கேட்டுப் பெற முடியும்” என்றார். அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார்.