

விளவங்கோட்டில் விஜயதரணிக்கு சீட் தருவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்ததாம் காங்கிரஸ் தலைமை. தொகுதிக்குள் வட்டார தலைவர்கள் சிலரே அவருக்கு எதிராக நின்றதும் இதற்கு ஒரு காரணம். இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்ட தரணி, இனியும் அரசியலில் இருக்க வேண்டுமா என்ற மனநிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டாராம்.
இதையறிந்து விளவங்கோடு தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பை நிறுத்தி வைத்த பாஜக, விஜயதரணி தரப்புக்கு தூது அனுப்பியதாம். முதல் சுற்று பேச்சுவார்த்தையிலேயே தரணி தரப்பு விதித்த வெயிட்டான நிபந்தனையைக் கேட்டு பாஜக தரப்பு பின்வாங்கி விட்டதாம்.
அடுத்ததாக, அதிமுக தரப்பிலும் விஜயதரணியை இழுக்க ஆளாளுக்கு அவரது போன் நம்பரைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இதற்கிடையில் தான் என்ன ஆனாலும் பரவாயில்லை என விஜயதரணிக்கே விளவங்கோட்டை ஒதுக்கிவிட்டது காங்கிரஸ் தலைமை.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.