

அம்பாசமுத்திரம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் ராணி ரஞ்சிதம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையின் மனைவி. நெல்லை மாநகர காவல் கூடுதல் ஆணையராக இருக்கும் வெள்ளத்துரை, சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்டரில் முக்கிய கருவியாக இருந்தவர் என்பதை நாடே அறியும்.
இவரது மனைவி தேர்தலில் போட்டியிடுகிறார் என்றதுமே, அதிமுக முகாமும் திமுக முகாமும் கலவரப்பட்டுப் போனது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனும் அம்பையில் களத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், மனைவி தேர்தலில் போட்டியிடுவதால் வெள்ளத்துரையை நெல்லையிலிருந்து சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு இடமாறுதல் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தலில் எந்தக் கட்சி ஜெயித்தாலும் வெள்ளத்துரைக்கு வேதனை தான் போலிருக்கிறது!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.