Published : 22 Mar 2021 21:58 pm

Updated : 22 Mar 2021 21:58 pm

 

Published : 22 Mar 2021 09:58 PM
Last Updated : 22 Mar 2021 09:58 PM

ஹாட் லீக்ஸ்: சின்ன மகளும் வந்தாச்சு!

hot-leaks

விராலிமலை

விராலிமலை தொகுதியில் இந்தமுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேறுவது எளிதான காரியமல்ல என்றே கள நிலவரம் சொல்கிறதாம். இதை உள்வாங்கிய அமைச்சர் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்.

தாய்மார்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில், கடந்த முறை தனது மூத்த மகள் ரிதன்யா பிரியதர்ஷினியை களத்தில் இறக்கி தனக்காக பிரச்சாரம் செய்யவைத்த விஜயபாஸ்கர், இம்முறை தனது இளைய மகள் அனன்யாவின் கையிலும் மைக்கைக் கொடுத்திருக்கிறார். அத்துடன், “6,500 ரூபாய் மதிப்பில் வீட்டுக்கு ஒரு எல்இடி டிவியும் வரப்போகுது” என்று அதிமுக வட்டாரத்தில் மெல்லமாய் கிசுகிசுக்கிறார்கள்.


“டிவி எல்லாம் எப்படி வீட்டுக்கு வீடு விநியோகம் செய்வார்கள்?” என்று கேட்டால், “அதுக்குத்தான் தனக்குத் தோதான அதிகாரிகளை முன்கூட்டியே தொகுதிக்குள் பக்காவா செட்பண்ணி வெச்சுட்டோம்ல...” என்று சிரிக்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.



தவறவிடாதீர்!

அதிமுகஅமைச்சர் விஜயபாஸ்கர்விஜயபாஸ்கரின் மகள்கள்விஜயபாஸ்கர் பிரச்சாரம்அதிமுக பிரச்சாரம்TN Assembly Election 2021TN Assembly Elections 2021Assembly Elections 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021Tamilnadu Assembly Elections 2021தமிழக சட்டமன்றம்தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x