

விராலிமலை தொகுதியில் இந்தமுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேறுவது எளிதான காரியமல்ல என்றே கள நிலவரம் சொல்கிறதாம். இதை உள்வாங்கிய அமைச்சர் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்.
தாய்மார்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில், கடந்த முறை தனது மூத்த மகள் ரிதன்யா பிரியதர்ஷினியை களத்தில் இறக்கி தனக்காக பிரச்சாரம் செய்யவைத்த விஜயபாஸ்கர், இம்முறை தனது இளைய மகள் அனன்யாவின் கையிலும் மைக்கைக் கொடுத்திருக்கிறார். அத்துடன், “6,500 ரூபாய் மதிப்பில் வீட்டுக்கு ஒரு எல்இடி டிவியும் வரப்போகுது” என்று அதிமுக வட்டாரத்தில் மெல்லமாய் கிசுகிசுக்கிறார்கள்.
“டிவி எல்லாம் எப்படி வீட்டுக்கு வீடு விநியோகம் செய்வார்கள்?” என்று கேட்டால், “அதுக்குத்தான் தனக்குத் தோதான அதிகாரிகளை முன்கூட்டியே தொகுதிக்குள் பக்காவா செட்பண்ணி வெச்சுட்டோம்ல...” என்று சிரிக்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.