

புதுச்சேரியில் பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னபிறகு, ரொம்பவே தெம்பாக இருக்கிறார் முன்னாள் முதல்வர் ரங்கசாமி. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸில் ஐக்கியமாகி வருகிறார்கள்.
புதுச்சேரியில் மிகவும் பிரபலமானவர் தட்டாஞ்சாவடி செந்தில். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருந்த காலங்கள்கூட உண்டு. ஆனால், குற்றம் நிரூபிக்கப்படாததால் அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட செந்திலுக்கும் எம்எல்ஏ ஆசை வந்துவிட்டது. அதைச் சாத்தியமாக்க ‘வன்னியர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கியவர், காலாப்பட்டு தொகுதியைக் குறிவைத்து என்.ஆர்.காங்கிரஸில் கலந்தார்.
இவரைக் கட்சியில் சேர்ப்பது குறித்து சீனியர் நிர்வாகிகள் சொன்னது எதையும் ரங்கசாமி காதில் போட்டுக் கொள்ளவே இல்லையாம். இதையடுத்து, ரங்கசாமி இப்போது எங்கு சென்றாலும் தனது பரிவாரங்கள் புடைசூழ வந்து பந்தா காட்டுகிறார் செந்தில். செந்திலாதிக்கம் என்.ஆர்.காங்கிரஸுக்குள் ஏகப்பட்ட புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்