Last Updated : 18 Mar, 2021 10:48 PM

Published : 18 Mar 2021 10:48 PM
Last Updated : 18 Mar 2021 10:48 PM

தேர்தல் பணியை ஒருங்கிணைக்க பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் மாநிலப் பார்வையாளர்கள் நியமனம்- ராம.சீனிவாசன் விருதுநகருக்கு மாற்றம்

மதுரை

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பணியை ஒருங்கிணைக்க 31 மாநில பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் தேர்தல் பணியை ஒருங்கிணைக்க பாஜக சார்பில் 31 மாநிலப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி- எஸ்.வி.அன்புராஜ் (விருதுநகர் மேற்கு மாவட்ட பார்வையாளர்), நாகர்கோவில்- ஆர்.உமாபதி (மாநில செயலர்), குளச்சல்- எஸ்.சதீஷ்குமார் (மீனவர் அணி மாநில தலைவர்), மார்டின் (சிறப்பு அழைப்பாளர்), பம்மநாபபுரம்- நீலமுரளியாதவ் (தேசிய பொதுக்குழு உறுப்பினர்), கே.நெல்லையம்மாள் (மகளிரணி மாநில பொதுச் செயலர்), கிள்ளியூர்- எஸ்.கட்டளை ஜோதி ( கன்னியாகுமரி மாவட்ட பார்வையாளர்), திருநெல்வேலி- ஏ.ஜி.பார்த்தசாரதி (விருதுநகர் கிழக்கு மாவட்ட பார்வையாளர்), விருதுநகர்- ராம.சீனிவாசன் (மாநில பொதுச் செயலர்), ராமநாதபுரம்- கே.சண்முகராஜ் (மாநில செயலர்), காரைக்குடி - டால்பின் ஸ்ரீதர் (மாநில செயலர்), மதுரை வடக்கு- கே.திருமலைச்சாமி (தேசிய பொதுக்குழு உறப்பினர்).

அரவக்குறிச்சி - டாக்டர் எம்.சிவசுப்பிரமணியம் (மாநில இணை பொருளாளர்), ஜி.கே.நாகராஜ் (விவசாய அணி மாநில தலைவர்), திருவையாறு - புரட்சி கவிதாசன் ( மாநில துணைத் தலைவர்), திட்டக்குடி (தனி) - வி.அருள் (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பார்வையாளர்), ஜெ.சுகுமாறன் (மாநில செயற்குழு உறுப்பினர்), திருக்கோவிலூர்- பி.கார்த்தியாயினி ( மாநில செயலர்), வி.தசரதன் (வேலூர் மாவட்டத் தலைவர்), ராம.ஜெயக்குமார் (மாவட்ட பொதுச் செயலர்), திருவண்ணாமலை - கே.வெங்கடேசன் (வேலூர் மாவட்ட பார்வையாளர்), ஜி.பாஸ்கர் (பொருளாதார பிரிவு மாநில தலைவர்), துறைமுகம்- ஜெ.லோகநாதன் (ஓபிசி அணி மாநில தலைவர்), ஆயிரம் விளக்கு- கரு.நாகராஜன் (மாநில பொதுச்செயலர்), கராத்தே ஆர்.தியாகராஜன் (சிறப்பு அழைப்பாளர்), மொடக்குறிச்சி - என்.பாயிண்ட் மணி (ஈரோடு தெற்கு மாவட்ட பார்வையாளர்), ஏ.பி.முருகானந்தம் (கோவை வடக்கு மாவட்ட பார்வையாளர்), தாராபுரம் (தனி)- டாக்டர் ஜி.கே.எஸ்.செல்வகுமார் (மாநில பொதுச் செயலர்), கே.டி.ராகவன் (மாநில பொதுச் செயலர்), கோவை தெற்கு- எம்.முருகானந்தம் (மாநில துணைத் தலைவர்).

மதுரையில் பாஜக போட்டியிடும் வடக்கு தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்த பாஜக மாநில பொதுச் செயலர் ராம.சீனிவாசன் விருதுநகர் தொகுதியின் மாநில பார்வையாளராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருமலைச்சாமி மதுரை வடக்கு தொகுதி மாநில பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x