

அதிமுகவுக்கும் திமுகவுக்குமாக போக்குவரத்தில் இருந்த ராஜகண்ணப்பன், ஒருவழியாக திமுகவில் செட்டிலாகி முதுகுளத்தூர் தொகுதிக்கு சீட்டும் வாங்கிவிட்டார். யாதவர் மற்றும் பட்டியலினத்து மக்கள் கணிசமாக இருக்கும் தொகுதி என்பதால், கண்ணப்பனின் வெற்றி கன்ஃபார்ம் என்கிறார்கள்.
முன்னதாக, மதுரை கிழக்கு, திருவாடானை, ராமநாதபுரம் தொகுதிகளை குறிவைத்து சிலபல வேலைகளைச் செய்த கண்ணப்பன் அது கிடைக்காது என்றதும் பாதுகாப்பான முதுகுளத்தூரில் செட்டிலாகிவிட்டார். “அண்ணனுக்கு அமைச்சர் பதவியும் குடுத்துருவாங்க. அதுக்காக பேசவேண்டிய இடத்துல பேசவேண்டிய விதத்துல பேசியும் வெச்சுட்டார்” என்று ஆர்ப்பரிக்கிறார்கள் கண்ணப்ப கோடிகள்.
ஏற்கெனவே, மு.க.அழகிரி சொன்னபடி தனக்கு அமைச்சர் பதவி வாங்கித் தரவில்லை என்பதால் தான் திமுக எம்எல்ஏ-வாக இருக்கும்போதே கட்சியைவிட்டு கண்ஸ் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.