

கமலுக்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும் என்று மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் வேட்பாளர் ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனின் மக்கள் சந்திப்பு தேர்தல் நாடகம் என்று பிற கட்சிகள் விமர்சிப்பது குறித்த கேள்வி ஸ்ரீபிரியாவிடம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து வேட்புமனுவை தாக்கல் செய்த ஸ்ரீப்ரியா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “ எல்லாருக்கும் உள்ளதுபோல் மாற்றம் தேவை என்ற நம்பிக்கை எங்களுக்கும் உள்ளது.
கமலுக்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். தேர்தலுக்காகவே மட்டும் அவர் மக்களை சந்திக்கவில்லை. கமல் மட்டுமல்ல மக்கள் நீதி மய்யத்தில் உள்ள அனைவருமே மக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள்தான்..
வேட்புமனுவை வெற்றிக்கரமாக தாக்கல் செய்துவிட்டேன். மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாம் இங்குதான். பிரச்சாரத்தை இன்று மாலையிலிருந்து துவங்க இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.