

மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரான, சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலேயே போட்டியிட மோதினார். ஆனால், இவர் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தோஸ்த் என்பதால் எதிர்க்கோஷ்டியினர் தலையிட்டு அன்புக்கு அணை போட்டார்கள்.
இப்போது மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட அன்பு தரப்பிலிருந்து அப்ளிகேஷன் கொடுத்தார்களாம். ஆனால் வம்பே வேண்டாமென்று, மத்திய தொகுதியை கூட்டணிக் கட்சியான பசும்பொன் தேசிய கழகத்துக்குத் தள்ளிவிட்டுவிட்டதாம் அதிமுக தலைமை. அன்புச்செழியன் மட்டும் நின்றிருந்தால், மதுரை மத்தி மக்கள் நிச்சயம் பங்குனியிலேயே சித்திரைத் திருவிழாவைக் கண்டிருப்பார்கள்!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.