

பொள்ளாச்சி பெண்களிடம் தவறான பொய்ப் பிரச்சாரத்தை முன்வைத்து திமுக ஓட்டு வாங்க நினைக்கிறது என்று எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது, “பொள்ளாச்சி பெண்களிடம் தவறான பொய்ப் பிரச்சாரத்தை முன்வைத்து ஓட்டுகளை வாங்க திமுக நினைக்கிறது. அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே கோவையில்தான் அதிக வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறோம். தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து 11 மருத்துவக் கல்லூரிகளைக் கேட்டுப் பெற்று இருக்கிறோம்.
திமுக எதுவுமே செய்யாமல் ஓட்டு கேட்கிறது. மீண்டும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார்” என்று தெரிவித்தார்.