

திருநெல்வேலி தொகுதியை பாஜகவுக்கு தரமறுத்து ரொம்பவே போராடியது அதிமுக. மாவட்டச் செயலாளர் கணேசராஜா தரப்பினர், ‘நெல்லையில் பாஜக களம் கண்டால் தோல்வி உறுதி’ என சோஷியல் மீடியாக்களில் பகிரங்கமாகவே கருத்துகளை பதிவிட்டார்கள்.
இருந்தாலும் தவிர்க்க முடியாத காரணத்தால் பாஜகவுக்கு நெல்லையைத் தந்து விட்டு, கணேசராஜாவை சமாதானப்படுத்த அவரை நாங்குநேரியில் நிறுத்தி இருக்கிறார்கள். இதனால் நாங்குநேரி சிட்டிங் அதிமுக எம்எல்ஏ-வான ரெட்டியார்பட்டி நாராயணனுக்கும் சீட் பறிபோய் அவரும் அப்செட்.
இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு வெளியூர்காரர் வேஷம் கட்டிய அதிமுக, இப்போது அதே வேஷத்தை, தானே கட்டிக் கொண்டிருக்கிறது.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.