ஆப்கனில் பள்ளி மாணவிகள் பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஆப்கனில் பள்ளி மாணவிகள் பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பள்ளி மாணவிகள் பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.

மார்ச் 10ஆம் தேதி காபூல் கல்வித்துறை இயக்குனர் அகமத் சமிர் கவாரா, “12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய பெண் குழந்தைகள் பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் பாடுவதற்கு அனுமதி கிடையாது” என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கல்வித்துறை அமைச்சகம் தரப்பில், ”காபூல் நகரின் கல்வித் துறை சார்பாக சமீபத்தில் வெளியான அறிக்கை, ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பொதுவெளியில் பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசின் இம்முடிவை பல்வேறு சமூக நல அமைப்புகள் பாராட்டியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in