எலெக்‌ஷன் கார்னர்: காங்கயத்துக்கு வந்த சோதனை

எலெக்‌ஷன் கார்னர்: காங்கயத்துக்கு வந்த சோதனை
Updated on
1 min read

பிஏபியின் கடைமடை பாசனப் பகுதியான காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் மாதத்துக்கு 14 நாட்கள் தண்ணீர் தர விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காங்கயம் தொகுதியில் போட்டியிட ஆயிரம் விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

1991-ல் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதி இது. விவசாயிகள் தங்களின் முடிவை கைவிட்டால் மட்டுமே, காங்கயத்தில் ஓட்டிங் மெஷினை வைத்து தேர்தல் நடத்தமுடியும் என்பதால், விவசாயிகளை தாஜா செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in