ஹாட் லீக்ஸ்: அவரே சிஎம் ஆகட்டும் - எகிறிய ஈபிஎஸ்

ஹாட் லீக்ஸ்: அவரே சிஎம் ஆகட்டும் - எகிறிய ஈபிஎஸ்

Published on

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 8-ம் தேதியே வெளியாவதாக இருந்ததாம். ஆனால், இதற்காக தயாரான பட்டியலில் ஈபிஎஸ் தரப்புக்கு 70 சதவீதமும் ஓபிஎஸ் தரப்புக்கு 30 சதவீதமும் சீட் போட்டிருந்தார்களாம்.

பட்டியலைப் பார்த்துவிட்டுப் பதறிய ஓபிஎஸ், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று சீறியதுடன், பட்டியலில் கையெழுத்திட மறுத்துவிட்டாராம். இதையடுத்து பஞ்சாயத்து ஈபிஎஸ் வீட்டுக்குப் போனதாம். விஷயத்தைக் கேட்டு வெகுண்ட ஈபிஎஸ், “கட்சியை அவரே பார்த்துக் கொள்ளட்டும். அவரே சிஎம் ஆகட்டும்.

ஆனா அதுக்கு, ஐயாயிரம் கோடி செலவு பண்ணணும். அவரால முடியும்னா எல்லாத்தையும் விட்டுட்டு நான் ஒதுங்கிக்கத் தயார்” என்று சொன்னாராம். இதன் பிறகு இருதரப்புக்கும் சமாதானப் படலங்கள் நடந்து கடைசியில், 60-க்கு 40 என சீட் ஷேரிங் முடிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானதாம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in