

இம்முறை திருச்சி கிழக்கு தொகுதிக்கு மாற ரொம்பவே மெனக்கிட்டார், உதயநிதியின் உற்ற தோழர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆனால், அவரை மீண்டும் திருவெறும்பூரிலேயே நிற்கவைத்துவிட்டது தலைமை. இங்கு அதிமுக வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் குமார் போட்டியிடுவதும் மகேஷுக்கு சவால்தான்.
கூடவே, இன்னொரு சிக்கலும் இருக்கிறது. தன்னை முகநூலில் தரக்குறைவாக விமர்சித்தார் என்பதற்காக, திருவெறும்பூர் ஒன்றிய திமுக செயலாளர் நவல்பட்டு விஜியை அண்மையில் கட்சியிலிருந்து கட்டம்கட்ட வைத்தார் மகேஷ். அடிபட்ட விஜி, “மகேஷுக்கு எதிராக வீடுவிடாக துண்டறிக்கை கொடுப்பேன்” என மிரட்டுகிறாராம்.
இதைக் கேள்விப்பட்ட கே.என்.நேரு, “தேவையில்லாம இந்த நேரத்துல போய் விஜிய முறைச்சிக்கிட்டாரு மகேஷ். அந்தாளு எதாச்சும் செஞ்சு இவரு தோத்துட்டா நேரு தான் தோற்கடிச் சுட்டான்னு நம்ம தலைய போட்டு உருட்டுவானுகளேப்பா” என்று நொந்துகொண்டாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.