

மக்கள் நீதி மய்யம், அதிமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளுமே பாஜகவின் பி டீம்தான் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் எம்.பி. ஜோதிமணி கூறும்போது, “அதிமுக அமைச்சர்களில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருமே பாஜகவின் ஸ்லீப்பர் செல்தான். அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக என அனைத்துமே பாஜகவின் பி டீம்தான்.
பாஜகவின் பி டீமாக இருப்பதால்தான் மக்கள் நீதி மய்யம் சூரப்பாவை ஆதரிக்கிறது. நாங்கள் நிச்சயமாக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஒரு கட்சியுடன் கூட்டணி இருக்கும்போது மற்ற கட்சியில் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் தரம் தாழ்ந்த கட்சி காங்கிரஸ் இல்லை” என்று விமர்சித்துள்ளார்.