ஏனாமில் சுயேச்சைக்கு கேரள சிபிஎம் ஆதரவு

மாஹே பிராந்தியத்தில் சிபிஎம் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஹரிதாசன்.
மாஹே பிராந்தியத்தில் சிபிஎம் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஹரிதாசன்.
Updated on
1 min read

கேரளா அருகேயுள்ள மாஹே பிராந்தியத்தில் சுயேச்சை வேட்பாளருக்கு கேரள சிபிஎம் ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியின் பிராந்தியமான மாஹே, கேரளத்தை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு கடந்த முறை போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு, சிபிஎம் ஆதரவு தெரிவித்தது. அவரும் மாஹேவில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் வல்சராஜை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு ராமச்சந்திரன் இறுதி வரை ஆதரவு அளித்தார். காங்கிரஸ், திமுகவில் வென்றோர் பலரும் கட்சி மாறினாலும் ராமச்சந்திரன் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் முன்னாள் அமைச்சர் வல்சராஜ் வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாஹேவில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ள ஹரிதாசனுக்குக் கேரள சிபிஎம் ஆதரவை இன்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி புதுச்சேரி சிபிஎம் தரப்பில் கேட்டதற்கு, "கேரளத்தை ஒட்டி வரும் மாஹே பிராந்தியமானது கேரள சிபிஎம் கீழ் வருகிறது. அப்பிராந்தியத்தைப் பொறுத்தவரை கேரள சிபிஎம் தரப்பே முடிவு எடுப்பார்கள். நாங்கள் புதுச்சேரி, காரைக்கால் தொடர்பாக மட்டுமே முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in