

நெல்லை வந்த ராகுலை நாங்குநேரி பொதுக்கூட்டத்துக்கு அழைத்துச் சென்றதில், காங்கிரஸ் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு பெரும்பங்கு உண்டு. ராகுலை வரவேற்க ரூபி கோடி ரூபாய்க்கும் மேலாக கொட்டி இருந்தார்.
இடைத்தேர்தலில் நாங்குநேரியில் போட்டியிட்டு தோற்ற இவர், இந்தமுறை எப்படியும் ஜெயித்துவிட காய்நகர்த்துகிறார். இவரது தடபுடல் செலவுகளைப் பார்த்துவிட்டு, “திராவிடக் கட்சிகளுக்கு இணையாக ரூபி மிரட்டிட்டாருல்ல” என பத்திரிகையாளர்களிடம் பதிவுசெய்துவிட்டுப் போனார் கே.எஸ்.அழகிரி.
ரூபியின் தடபுடல் ஏற்பாடுகளை மெச்சும் முகமாக, ராகுல்காந்தியே அவருக்கு சால்வை போர்த்தி பாராட்டியது தனிக்கதை.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.