

திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் போட்டி யிடும் திருப்பத்தூர் தொகுதியில், அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக தானே நிற்கப் போவதாக தம்பட்டம் அடித்து வருகிறார் ‘நமது அம்மா’ நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ்.
இவருக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சப்போர்ட்டாம். ஆனால் அதிமுக தலைமையோ, “அவர பத்திரிகை வேலைய மட்டும் பார்க்கச் சொல்லுங்க” என்று சொல்கிறதாம். இருந்தாலும் திருப்பத்தூருக்கு விருப்ப மனு கொடுத்துவிட்டு, ஆதரவு அமைச்சர்களை நம்பி தொகுதிக்குள் வலம்வந்து கொண்டிருக்கிறார் மருது.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.