

இம்முறையும் காங்கிரஸ் பெருந்தலை களில் பலரும் தங்களது வாரிசுகளை சட்டப்பேரவைக்கு அனுப்ப மெனக்கிட்டு வருகிறார்கள். ஆனால் ராகுல் காந்தியோ, “மஹாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் வாரிசுகளுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் வாய்ப்பளித்தோம். அவர்களில் பலர் கட்சியைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
அதனால் வாரிசுகளா, வசதி படைத்தவர்களா என்றெல்லாம் பார்க்காமல் கட்சியில் பிடிப்புடன் உள்ள சாமானியர்களுக்கும் வாய்ப்புக் கொடுங்கள். ஐம்பது வயதுக்குக்கீழ் உள்ளவர்களை சட்டப்பேரவைக்கு அனுப்புங்கள். வசதிபடைத்தவர்கள் மட்டும்தான் ஜெயிக்க முடியும் என்றால், பாராளுமன்றத் தேர்தலில் கரூர் ஜோதிமணி போன்றவர்களால் எப்படி ஜெயிக்க முடிந்தது?” என்று தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம்.
ராகுல் ஆசையை நிறைவேற்றுகிறார்களா என்று பார்க்கலாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.