

கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கோவை வடக்கு, கிணத்துக்கடவு, கோவை தெற்கு ஆகிய 3 தொகுதிகளை முறையே ஜி.கே.எஸ். செல்வகுமார், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோருக்காக கேட்கிறது பாஜக.
அதிலும் கோவை தெற்கு தொகுதியை கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறதாம். கடந்தமுறை இங்கு போட்டியிட்ட வானதி சீனிவாசன் 33,113 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். அவருக்காகவே இம்முறை இந்தத் தொகுதியை கேட்கிறதாம் பாஜக. இதனால் இங்கு இப்போது சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கும் அம்மன் அர்ச்சுனனை கோவை வடக்குத் தொகுதிக்கு மாற்றும் யோசனையில் இருக்கிறது அதிமுக.
இதையே சாக்காக வைத்து வடக்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏ-வான அருண்குமாருக்கும் கவுண்டம்பாளையம் சிட்டிங் எம்எல்ஏ-வான ஆறுகுட்டிக்கும் சீட் இல்லை என கைவிரிக்க கணக்குப் போடுகிறது எடப்பாடியார் டீம். இவர்கள் இருவரும் ஓபிஎஸ் பின்னால் போய்விட்டு வந்தவர்கள் என்பது கூடுதல் தகுதி!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.