ஹாட் லீக்ஸ்: சிதம்பரம் தான் சொன்னாரா?

ஹாட் லீக்ஸ்: சிதம்பரம் தான் சொன்னாரா?
Updated on
1 min read

திமுக ஆட்சியில், மணல் வருமானங்களைக் கர்ம சிரத்தையாகக் கவனித்துக் கொண்டவர் பள்ளத்தூர் தொழிலதிபர் படிக்காசு. இவரது மகன் பாலசுப்பிரமணியன் காரைக்குடி தொகுதியில் போட்டியிட காங்கிரஸில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இங்கு சிட்டிங் எம்எல்ஏ-வான கே.ஆர்.ராமசாமி சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.

இவர், தனக்கும் மனு கொடுத்து தனது விசுவாசியான கான்ட்ராக்டர் வேலுச்சாமியையும் விருப்ப மனு கொடுக்க வைத்திருக்கிறார். வேலுச்சாமி யாதவர் என்பதால், கே.எஸ்.அழகிரியும் இதற்கு ஆதரவு என்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை கலக்காமல் இப்படியொரு ரூட் எடுப்பது தெரிந்ததும் ப.சிதம்பரம் தான், படிக்காசு மகனை கிளப்பிவிட்டதாக தொகுதிக்குள் ஒரு செய்தி வட்டமடிக்கிறது.

ஆனால், இதை கார்த்தி சிதம்பரம் மறுத்து வருகிறாராம். இதனிடையே, “படிக்காசு திமுக அனுதாபி. கட்சிக்கு சம்பந்தமில்லாத அவரது மகனுக்கு சீட் கொடுப்பதை ஏற்கமுடியாது. இது காங்கிரஸ் கட்சியா அல்லது கரன்ஸி உள்ளவர்களுக்கான கட்சியா?” என சமூக வலைதளத்தில் சிலர் கலகமூட்டி வருகிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in