ஹாட் லீக்ஸ்: ஜானுக்கு ஸ்கெட்ச் போடும் நாராயணசாமி!

ஹாட் லீக்ஸ்: ஜானுக்கு ஸ்கெட்ச் போடும் நாராயணசாமி!
Updated on
1 min read

புதுச்சேரியில் தனது எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்து, நாராயணசாமி முதல்வராக வழிவிட்டவர் ஜான்குமார். நாராயணசாமியை “அப்பா” என்று அழைக்குமளவுக்கு பாசமாக இருந்த ஜான்குமாரை, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிறகு நாராயணசாமி ‘திருப்தி’யாக வைத்திருக்கவில்லை.

இதைக் கணக்குப்போட்டு காய் நகர்த்திய பாஜக, ஜான்குமாரை (இடைத் தேர்தலில் போட்டியிட்டு இவர் மீண்டும் எம்எல்ஏ ஆகிவிட்டார்) ஸ்கெட்ச் போட்டு தூக்கி, அவரது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்து நாராயணசாமி அரசை ஆட்டம் காண வைத்தது. அத்துடன், அமித் ஷா முன்னிலையில் ஜான்குமாரும் அவரது மகனும் கதரைத் துறந்து காவிக்கு மாறினார்கள். இதனால் கெட்ட கடுப்பில் இருக்கும் நாராயணசாமி, ஜானின் தீவிர ஆதரவாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

நெல்லித் தோப்பு தொகுதியில், இம்முறை ஜானோ அவரது மகனோ பாஜக வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. இவர்களைச் சமாளிக்க, ஜானின் ஆதரவாளரான பழனி என்பவரை காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு கொடுக்கவைத்திருக்கிறார் நாராயணசாமி.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in