

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட, தொகுதிக்கு 3 பேர் வீதம் கொண்ட பட்டியலை தலைமைக்குக் கொடுத்திருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. இதேபோல் ஐ-பேக் டீமும் தங்கள் பங்குக்கு ஒரு பட்டியலைச் சமர்ப்பித்திருக்கிறதாம்.
ஐ-பேக் பட்டியலுக்கு அதிமுக்கியத்துவம் தரப்படலாம் என்பதால், வேட்பாளர் பட்டியல் வெளியானதும் கட்சிக்குள் அதிருப்திக் குரல்கள் அலையடிக்கலாம் என நினைக்கிறாராம் வேலு. இதை முன்கூட்டியே சமாளிக்கும் விதமாக, விருப்ப மனு கொடுத்தவர்களை எல்லாம் அழைத்துப் பேசும் அவர், “கட்சித் தலைமை யாரைச் சொல்கிறதோ அவர்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒற்றுமையாக இருந்து திமுக வெற்றிக்காக உழைப்போம்” என்று தயார்படுத்தி வருகிறார்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.