

கூட்டணி பேச்சுவார்த்தைகளே குத்துவெட்டு ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கும் நிலையில், புதுச்சேரியில் நெடுங்காடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தையும், ஸ்டாலின் படத்தையும் போட்டு பிரச்சாரத்துக்கே புறப்பட்டுவிட்டார் மருத்துவர் விக்னேஷ்வரன். காரைக்கால் மாவட்டத்தின் நெடுங்காடு தொகுதிவாசிகளின் சமூக வலைதள குழுக்களில் திமுக வேட்பாளராக வலம்வருகிறார் விக்னேஷ்வரன்.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரான காரைக்கால் நாஜிமின் தீவிர ஆதரவாளரான இவர், நாஜிம் கொடுத்த தெம்பில்தான் இப்படி துணிச்சலாக களமாடுகிறாராம். தனித் தொகுதியான நெடுங்காடு, கடந்தமுறை என்.ஆர்.காங்கிரஸ் வென்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.