

திமுக தலைவர் ஸ்டாலினின் மைத்துனர் மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தி. இவர் திருச்சியில் நடைபெற்ற சமுதாய விழா ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்தே, இந்த வழக்கின் பின்னணியில் திமுக இருப்பதாக சர்ச்சை கிளம்பியது.
இதனால் பதறிப்போன இராஜமூர்த்தி, “திருச்சி விழாவில் தமிழிசையின் தொன்மை, இசையின் பெருமை அருமைகள் குறித்து மட்டும்தான் பேசினேன். எல்லோரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதி வழியே நமது வழி. எனது மனைவியே வன்னிய சமுதாயம்தான். அவரது சான்றிதழை வேண்டுமானால் காட்டுகிறேன்.
நான் எனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திறமையாலும் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். யாரும் என் பெயரை புனைந்து தர்மசங்கடம் தர வேண்டாம் சகோதரர்களே” என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.