கவிஞர் வரவர ராவ் விடுதலை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு

கவிஞர் வரவர ராவ் விடுதலை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு
Updated on
1 min read

கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் நேற்று பின்னிரவில் விடுவிக்கப்பட்டார்.

அவருடைய பாஸ்போர்ட்டை தேசிய புலனாய்வு மைய நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் அவர் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், பீமா கோரேகானில் கடந்த 2018, ஜனவரி 1-ல் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர். நவி மும்பை, தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவக் காரணங்களுக்காக அவர் ஜாமீன் கேட்டிருந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 6 மாத காலம் ஜாமீன் உள்ள நிலையில் நேற்றிரவே அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவரது விடுதலையை அவரின் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in