

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பேச்சுவார்த்தை, வேட்பு மனு தாக்கல் என்று அரசியல் நகர்வுகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இதற்கிடையே கட்சியினரின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களும் களைகட்டி வருகின்றன.
இந்நிலையில் மதுரை, உசிலம்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், ''வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் வெற்றி பெறும். குறிப்பாக அதிமுக 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறும்.
கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்தால் இந்தத் தேர்தலில் முடிவெடுப்பேன்'' என்று ஜெயபிரதீப் தெரிவித்தார்.
அதிமுக தன்னுடைய கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் இணைந்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.