

கரோனாவுக்குப் பலியான அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பனுக்கும் அதிமுக தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட ‘நிதி’ தாவா இன்னும் நிம்மதி இலக்கைத் தொடவில்லையாம். இருந்தும், அப்பாவின் பாபநாசம் தொகுதி தனக்கு கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கிறார் ஐயப்பன்.
அதிமுக தலைமையோ, பாபநாசத்தை தமாகாவுக்கு தாரைவார்த்துவிடலாமா என யோசிக்கிறதாம். அப்படி ஏதாவது நடந்தால், கரை வேட்டியை மாற்றிக் கட்டி களேபரம் செய்வார் ஐயப்பன் என்கிறார்கள்.
“இருக்கிற சொத்துபத்த காப்பாத்திக்கிட்டு இன்னும் நாலு வருசத்துக்கு நிம்மதியா பொழப்பு ஓட்டணும்னா பேசாம பாஜக பக்கம் போயிரு” என்று ஐயப்பனுக்கு ஐடியா கொடுக்கிறதாம் ஆதரவு வட்டம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.