Published : 03 Mar 2021 07:06 PM
Last Updated : 03 Mar 2021 07:06 PM

ஹாட் லீக்ஸ்: சிவகங்கைக்கு மோதும் சிம்மன்!

திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி காம்ரேடுகளுக்கா, கதர் பார்ட்டிகளுக்கா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், எப்படியும் தொகுதியை தங்களுக்காக பெற்றுவிடுவது என முனைப்பு காட்டுகிறது முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தரப்பு.

தனது மகன் ஜெயசிம்மாவுக்காக சிவகங்கைக்கு மல்லுக்கட்டுகிறாராம் நாச்சியப்பன். அதற்கு தடையாக யாரும் வந்துவிடக் கூடாது என குலதெய்வத்தைக் கும்பிடும் ஜெயசிம்மா, தங்களின் பரம எதிரியான கார்த்தி சிதம்பரத்தை தேடிப்போய் சந்தித்து கைகுலுக்கி இருக்கிறார். பிப்ரவரி 2-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியின் தந்தையார் கரியமாணிக்கம் அம்பலம் நினைவு தினம்.

அன்றைய தினம் நாச்சியப்பனும் ஜெயசிம்மாவும் கே.ஆர்.ராமசாமியின் இல்லத்துக்குச் சென்று அம்பலத்துக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கே இருந்துவிட்டு வந்தார்களாம். ஒருவேளை சிவகங்கை, காம்ரேடுகளுக்கு ஒதுக்கப் பட்டால் காரைக்குடியைக் கேட்போம் என்று சொல்கிறதாம் ஜெயசிம்மா முகாம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x