

திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தற்போது குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ-வாக இருக்கிறார். மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், கடந்த முறை தனக்கும் சீட் போட்டுக் கொண்டு சிதம்பரம் தொகுதியில் தனது அக்காள் மகன் செந்தில்குமாரையும் நிறுத்தினார் எம்ஆர்கே.
ஆனால், செந்திலால் சோபிக்க முடியவில்லை. அதனால், இம்முறை சிதம்பரத்தில் தனது மகன் கதிரவனையே களமிறக்கும் முடிவில் இருக்கிறார். சிதம்பரம் தொகுதியை மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனக்காக கேட்பதாகவும் ஒரு பேச்சு.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.