

தேர்தல் நெருங்கிவிட்டது என்பதால் இனி ஆளாளுக்கு சர்வே எடுக்கக் கிளம்பிவிடுவார்கள். அப்படித்தான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் சென்னை சர்வே டீமை வைத்து ரகசிய சர்வே எடுத்தாராம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.
சர்வே முடிவுகளை வைத்து தஞ்சையில் அதிமுகவுக்குச் சாதகமான ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்பது வைத்தியின் வைட்டல் பிளான். ஆனால், ‘அமமுக தனித்து நின்றால் தஞ்சையில் அதிமுகவுக்கு ஒரு தொகுதியில்கூட சாதகமான ரிசல்ட் கிடைக்காது’ என்று சர்வே டீம் கொடுத்த அறிக்கையால், சகலமும் ஆடிப்போய்க் கிடக்கிறாராம் வைத்தி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.