

கடலூரில் தேர்தல் கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரூ 1 லட்சம் மதிப்பிலான மக்கள் நீதி மய்ய டார்ச்லைட் சின்னம் அச்சிட்ட பனியன், சில்வர் பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர், போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூரில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நில எடுப்பு வட்டாட்சியர் விஜயா தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர் கடலூர் அருகே பெரியக்காட்டுப்பாளயம் பகுதியில் வாகன
சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அபோது புதுச்சேரியில் இருந்து
கடலூர் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரூ 1 லட்சம் மதிப்பில் மக்கள் நீதி மய்ய டார்ச்லைட் சின்னம் அச்சிடப்பட்டு ஏம்பலம் தொகுதி வேட்பாளர் பெயருடன் பனியன் மற்றும் சில்வர் பாத்திரம் ஆகியவற்றை இருந்தனர்.
போலீஸார் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து கடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைத்தனர்.