

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலுக்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தார்.
அவருக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மேளதாளம் முழங்க கிராமிய நாட்டுபுற கலை நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
அப்போது அவருக்கு மாநகர் மாவட்ட காங்கரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியண் வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக வழங்கினார்.
நிகழச்சியில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்பி முரளிராஜா, மாவட்ட துணை தலைவர்கள் பி.என். உதயகுமார், வெள்ளபாண்டியண், முத்துகிருஷ்ணண், ரசூல் மைதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.