

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவுக்கு இன்று 78 வயதாகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டரில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எடியூரப்பா, அனுபவம் வாய்ந்த தலைவர். அவர் தனது வாழ்க்கையை ஏழை மக்கள், விவசாயிகள் நலனுக்காக அர்ப்பணித்தவர். அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்க வேண்டுகிறேன், எனப் பதிவிட்டுள்ளார்.
எடியூரப்பா கர்நாடக முதல்வராக கடந்த 2006ல் பொறுப்பேற்றார். ஓராண்டு காலம் முதல்வராக பதவி வகித்த நிலையில் 2008 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார்.
தென் மாநிலங்களில் முதன்முறையாக பாஜகவின் முதல்வரானவர் எடியூர்ப்பா. அதேபோல் விவசாயிகளுக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்த முன்னோடி முதல்வர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.