

ஒருகாலத்தில் ஜெயலலிதாவின் முக்கியபடைத்தளபதிகளில் ஒருவராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன். அப்படிப் பட்டவர் டெண்டர் விவகாரத்தில் அம்மாவின் அதிருப்திக்கு ஆளானார்.
அதனால் 2016-ல் அவருக்கு நத்தம் தொகுதியைக் கொடுக்காமல், ஆத்தூரில் ஐ.பெரியசாமியை எதிர்த்து நிறுத்தி னார் ஜெயலலிதா. ஆத்தூரில் ஐபியிடம் தோற்றபிறகு அரசியலில் ஓரங்கட்டப்பட்ட விசுவநாதன், இப்போது மீண்டும் நத்தம் தொகுதியை குறிவைத்து தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார்.
ஆனால், தற்போதைய திமுக எம்எல்ஏ-வான ஆண்டி அம்பலத்தின் செல்வாக்கை எதிர்த்து ஜெயிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால், கட்சி தரும் ‘கொடை’யுடன் தனது பழைய சொத்து களையும் விற்று தேர்தலைச் சந்திக்கும் முடிவில் இருக்கிறாராம் நத்தம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.