Published : 26 Feb 2021 09:09 AM
Last Updated : 26 Feb 2021 09:09 AM

ஜிஎஸ்டி சாலை 8 வழிப் பாதையாக விரிவாக்கம்: ரூ.230 கோடி மதிப்பில் மூன்றாம் கட்டப் பணி தொடக்கம்

சித்தரிப்புப் படம்

தாம்பரம்

சென்னை அருகே கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் வரை ஜிஎஸ்டி சாலை ரூ.230.69 கோடியில் மதிப்பில் 8 வழிப் பாதையாக மற்றும் மூன்றாம் கட்டப் பணி நேற்று (25ம் தேதி) முதல் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், ஜிஎஸ்.டி சாலை 4 வழிப் பாதையில் இருந்து 8 வழிப் பாதையாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி ஜி.எஸ்,டி சாலையில் இரும்புலியூர் முதல் வண்டலூர் வரை ஏற்கனவே 20.77 கோடியில் 8 வழிப் பாதையாக ஏற்கெனவே அகலப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வண்டலூர் முதல் கூடுவாஞ்சேரி வரை 44.48 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் மகேந்திரா சிட்டி வரை ரூ. 230.69 கோடி மதிப்பீட்டில் 8 வழிப் சாலையாக அகலப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்தப் பணி ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏற்கெனவே உள்ள 4 வழிப்பாதையை 8 வழிப் பாதையாக மற்ற மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணைய நிதி உதவியுடன் மாநில நெடுஞ்சாலை துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஏற்கெனவே இரும்புலியூர் முதல் வண்டலூர் வரை பணிகள் முடிந்துவிட்டது. தற்போது வண்டலூரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை பணிகள் நடைபெற்று வருகிறது.

இது விரைவில் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் தற்போது ரூ. 230.69 கோடியில் கூடுவாஞ்சேரி முதல் செட்டிப்புண்ணியம் மகேந்திரா சிட்டி வரை 13.5 கிலோ மீட்டர் வரை பணிகள் மூன்று கட்டங்களாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி திட்டமிட்டபடி ஒரு ஆண்டியில் எட்டு வழிச்சாலை பணிகள் முடியும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x