

பிரான்ஸில் இரண்டாவது நாளாக கரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 85, ஆயிரத்தை கடந்துள்ளது. பிரான்ஸில் கரோனாவுக்கு 85 044 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 36,29,891 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களாக கரோனாவினால் மருத்துவமனைகளில் சேருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் முடிவதற்குள் பிரான்ஸில் 40 லட்சம் பேர் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்று இருப்பார்கள் என்றும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.