

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள அதிமுகவினர் இன்று (பிப்.24) முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம்.
இதுதொடர்பாக, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் ஏற்கெனவே அறிவிப்ப்பு வெளியிட்டனர்.
அதில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் கழகத்தினர், தலைமைக் கழகத்தில் வரும் பிப்.24-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணமாக, தமிழகத்தில் போட்டியிட ரூ.15 ஆயிரம், புதுச்சேரி மாநிலத்தில் ரூ.5 ஆயிரம், கேரளாவில் ரூ.2 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அதன்படி, இன்று காலை 10 மணி முதல் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.