

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப.உதய குமார், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தோல்விக்குப் பிறகு, அந்தக் கட்சியிலிருந்து விலகி ‘பச்சை தமிழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுப்பதற்காக அண்மையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் உதய குமார். அதில், “திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என யாரையும் ஆதரிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தமிழர் நலனில் அக்கறை கொண்ட யாரும் களத்தில் இப்போது இல்லை. சீமானும் தமிழின் பெயரைச் சொல்லி ஏமாற்றத்தான் செய்கிறார்.
ஆகவே, குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் கட்சி பார்க்காமல் தகுதியான வேட்பாளர்களை ஆதரிப்போம்” என்று, தான் எடுத்திருக்கும் முடிவைச் சொன்னாராம் உதயகுமார்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.