மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும்; எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்- வைகோ உருக்கம்

மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும்; எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்- வைகோ உருக்கம்
Updated on
1 min read

மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும் எனவும் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்றும் தொண்டர்களிடம் வைகோ உருக்கமாகத் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் நேற்று மாலை தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ''நாம் அதிகாரத்திலும் இல்லை. இப்போது அதிகாரப் பொறுப்புக்கு வரப் போகிறோம் என்று சொல்லக்கூடிய இடத்திலும் இல்லை. இருப்பினும் இவ்வளவு நிதியைத் தந்திருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கும்போது நம் மீது மக்கள் 27 ஆண்டுகளாக நம்பிக்கை வைத்திருக்கிறார்க்ள் என்பது தெரிகிறது.

நீங்கள் கவலைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். நமக்கும் ஒரு காலம் வரும். ஆகவே நடக்கின்ற நிகழ்ச்சிகள், நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம். வருத்தமாகக் கூட இருக்கலாம். நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வரவில்லையே என்றுகூடக் கவலையாக இருக்கலாம். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மதிமுக அண்ணாவின் இயக்கம், அவரின் பாதையில் பயணிக்கும் என்று எண்ணிச் செயல்படுங்கள்'' என்று வைகோ தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in