

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குடும்ப அரசியல் செய்வதாக கடந்த வாரம் பகிரங்கமாகவே வெடித்தார் மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரேசன்.
உடன்பிறப்பு ஒருவருடன் அலைபேசியில் வேலுவின் குடும்ப அரசியலைக் கொட்டித் தீர்த்த சுந்தரேசன், வேலுவின் சொத்துப் பட்டியலையும் வருமானங்களையும் வகைப்படுத்தி இருந்தார். இதையடுத்து சுந்தரேசன் எந்த நேரத்திலும் கட்டம்கட்டப்படலாம் என்று தகவல் வெளியானது. அவ்வாறே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார் சுந்தரேசன்.
ஆனால், இந்த நடவடிக்கையை கொண்டாட முடியாத குழப்பத்தில் இருக்கிறதாம் வேலு வகையறா. காரணம், வேலுவின் சொத்துப் பட்டியலை வாசித்த சுந்தரேசனுக்கு அவரது அனைத்து அந்தரங்கங்களும் அத்துபடியாம். இதைத் தெரிந்து கொண்டு அதிமுக அல்லது பாஜக தரப்பில் சுந்தரேசனை வளைத்துப் போட்டு அண்ணனுக்கு வேட்டு வைத்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறதாம் வேலு வட்டாரம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.