இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 99.

இதுகுறித்து இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனை தரப்பில், “இளவரசர் பிலிப் உடல்நலக் குறைவு காரணமாக கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, வயது முதிர்வின் காரணமாக இளவரசர் பிலிப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. இளவரசர் பிலிப் 1947இல் அப்போதைய இளவரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத்தை மணந்தார், பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரச தம்பதிகள் இவர்கள்தான்.

இங்கிலாந்து அரச குடும்பத்தினர் விவரம்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in