பயிர்க்கடனைப் போன்று மற்ற கடன்கள் தள்ளுபடி குறித்து அரசு பரிசீலனை: அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேட்டி

பயிர்க்கடனைப் போன்று மற்ற கடன்கள் தள்ளுபடி குறித்து அரசு பரிசீலனை: அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேட்டி
Updated on
1 min read

‘‘பயிர்க்கடனைப் போன்று மற்ற கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் கூறியதாவது:

ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் குறைவில்லாமல் சிறப்பாக பழனிசாமி அரசு செயல்படுத்தி வருகிறது. மனையிடங்கள் இல்லாதவருக்கு இலவச பட்டா வழங்கி வருகிறோம்.

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து முதல்வர், துனை முதல்வர் முறையாக அறிவிப்பர். அதுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி-குண்டாறு இனைப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்குவதாக இருந்தது. சில காரணங்களால் தள்ளிப்போனது. விரைவில் அத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். பயிர் கடன் போன்ற மற்ற கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது.

விவசாயிகள், மக்களுக்கு அரசு மனநிறைவாக செயல்படுவதால் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும், என்று கூறினார். அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், எம்ஜிஆர் மன்ற மாநில இளைஞரணித் துணைத் தலைவர் கருணாகரன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in