காரைக்குடி அருகே தனியார் வேளாண் கல்லூரியில் 20 மாணவர்களுக்கு காய்ச்சல்

காரைக்குடி அருகே தனியார் வேளாண் கல்லூரியில் 20 மாணவர்களுக்கு காய்ச்சல்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனியார் வேளாண் கல்லூரியில் 20 மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் தனியார் வேளாண் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு விடுதியில் தங்கியிருந்த 20 மாணவர்களுக்கு திடீரென தொடர் காய்ச்சல், ஜலதோஷம், வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. ஒரேசமயத்தில் 20 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in