Published : 17 Feb 2021 02:35 PM
Last Updated : 17 Feb 2021 02:35 PM

2.5 கிலோ தங்கப் புடவை: தெலங்கானா முதல்வர் பிறந்தநாளில் அமைச்சர் கோயிலுக்கு வழங்கினார்

தெலங்கானா முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு 2.5 கிலோ எடையில் எல்லம்மா கோயிலுக்குத் தங்கத்தால் செய்யப்பட்ட புடவையை, அமைச்சர் தலஸானி ஸ்ரீனிவாஸ் வழங்கினார்.

கேசிஆர் என்று அழைக்கப்படும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் 68-வது பிறந்த நாள் இன்று (பிப்.17) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவரின் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்தனர். 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 300 ஏழைப் பெண்களுக்குப் புடவைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக 30 நிமிடங்கள் கொண்ட முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் வாழ்க்கை வரலாற்றுப் பயணம், 3டி கிராபிக்ஸில் ஆவணப் படமாக வெளியிடப்பட்டது.

அதேபோல சந்திரசேகர் ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா, ஹைதராபாத்தின் பல்கம்பேட்டையில் உள்ள எல்லம்மா கோயிலுக்கு சுமார் 2.5 கிலோ தங்கத்தால் ஆன புடவையைக் காணிக்கையாக வழங்க உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் விலங்குகள் நலத்துறை அமைச்சர் தலஸானி ஸ்ரீனிவாஸ் யாதவ், தங்கத்தால் ஆன 2.5 கிலோ புடவையை, எல்லம்மா கோயிலுக்கு வழங்கினார். அப்போது கோயில் நிர்வாக அதிகாரி அன்னபூர்ணா உடன் இருந்தார்.

அப்போது அமைச்சர் தலஸானி ஸ்ரீனிவாஸ் கூறும்போது, ''குணா வெங்கடேஷ் உள்ளிட்ட கொடையாளர்களின் உதவியால் இந்தப் புடவை உருவாக்கப்பட்டது. முதல்வர் கேசிஆர் வருங்காலத்திலும் மாநிலத்துக்குச் சேவை செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x