Published : 17 Feb 2021 10:11 AM
Last Updated : 17 Feb 2021 10:11 AM

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களின் பிறந்தநாளன்று நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவன் தங்களுக்கு தேக ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து தெலங்கானா மக்களுக்கு புத்துணர்ச்சியுடன் சேவையாற்ற அருள்வார் என வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தெலங்கானா மாநிலம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்துக்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x